வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, March 4th, 2022

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

குறித்த பிரதேசங்களின் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இப்பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தென்மேற்குப் பகுதியின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: