வடக்கு அதிபர் ஆசிரியர்களின் நிலுவைகள் ஜனவரியில் சீராகும் – வடக்கு கல்விச்செயலர் தெரிவிப்பு!
Thursday, December 22nd, 2016வடக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்களின் அனைத்து நிலுவைகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் சீர்செய்யப்படும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கூறியதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்நிரன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினர் நேற்று சந்தித்தனர். இதன்போதே அவர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கினார். அதிபர்கள், ஆசிரியர்களுக்கு நீண்டகாலமாக நிலுவைகள் வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு உட்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஆசிரியர்களி; பதவியுயர்வுகள் தாமதமாவது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆசிரியர்களின் பதவியுயர்வுகளை கல்வி அமைச்சு சரியான பாசீலனையின் பின்னரே வழங்குகின்றது. சிலரது கோவைகளில் உரிய ஆவணங்கள் இன்மையால் தாமதம் ஏற்படுகின்றது என்று செயலாளர் பதிலளித்தார். எனவே பதவியுயர்வு கிடைக்காத ஆசிரியர்கள் தத்தமது ஆவணங்களைக் கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு அனுப்புங்கள் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|