வடக்கும் கிழக்கும் இணைவது சாத்தியமாகாது – அமைச்சர் கிரியெல்ல!

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் சாத்தியமற்றது. நாம் அவ்வாறான எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும், மக்கள் விரும்பாத எதையும் எம்மால் கட்டாயப்படுத்தி திணிக்கவும் முடியாது அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அடுத்த வருட ஆரம்பத்தில் உத்தேச அரசியல் அமைப்பை நாடாளுமன்றத்தில் முன்வைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், அதிகாரப்கிர்வு சிக்கலை ஏற்படுத்தும், எனவும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பிராதன இரண்டு கட்சிகளின் மட்டுமல்லாது கசல கட்சிகளும் சிந்தித்து வருகின்றன. சகல கட்சிகளின் பிரதிநிதித்துவங்களும் இதில் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பால் நாட்டின் ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்
Related posts:
|
|