வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர்!
Wednesday, May 23rd, 2018எதிர்வரும் 28 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த மூன்று மாவட்டங்களின் தற்போதைய தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையவுள்ளது.
அத்துடன் அன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும், பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும் அவர் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையின் முன்னேற்றப் பாதையில் இந்தியா என்றென்றும் கைகோர்த்து நிற்கும் : இந்தியப் பிரதமர் மோடி
அறிவிப்புப் பலகை இல்லை என்பதைக் காரணம் காட்டி தப்பிக்க முடியாது - தொல்பொருள் திணைக்கள ஆணையர் எச்சரிக...
நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர்களிடம் 3.4 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் சட்ட மா அதிபர்!
|
|