வடக்குகிழக்கில் போலிநியமனம் குறித்து விசாரணைக்கு உத்தரவு!

Tuesday, June 26th, 2018

வடக்கு கிழக்கு தேசிய பாடசாலைகளுக்கு போலிக் கையெழுத்துக்களுடன் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக் குபணித்துள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது –

வடக்குகிழக்குமாகாணங்களில் உள்ள தேசிய பாடசாலைகக்கு சிற்றூழியர் நியமனங்கள், முகாமைத்துவ உதவியாளர் நியமனங்களும் கல்வி அமைச்சின் கீழ் கடமை புரியும் மேலதிக செயலாளர்களின் போலிக் கையெழுத்துடன் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனங்களை பெற்ற ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் போலி என்பதை அறியாத நிலையில் பாடசாலைகளுக்கு கடமையேற்க சென்ற வேளை தேசிய பாடசாலைகளின் அதிபர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த நியமனங்கள் போலியானவை என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்த நியமனங்களை பெற்றுக் கொள்வதற்காக நியமனத்தை பெற்றுக்கொண்டவர்களால் மோசடியாளர்களுக்கு மூன்று இலட்சம் முதல் ஐந்து இலட்சம் ரூபாவரையிலான பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வடக்கு கிழக்கில் 30 இற்கு மேற்பட்ட இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Related posts: