வடக்கில் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Monday, May 3rd, 2021

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19 நேற்று தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் நேற்று 478 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்களில் 7 பேருக்கு தொற்றுறுதியானதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: