வடக்கில் 5 இலட்சம் பேர் வறட்சியினால் பாதிப்பு!

Wednesday, August 9th, 2017

நாட்டில் 19 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சுமார் 12 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சுமார் ஐந்து இலட்சம் பேர் வட மாகாணத்திலேயே வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 34 ஆயிரத்து 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர கிழக்கு மாகாணத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 16 ஆயிரத்து 300 குடும்பங்களை சேர்ந்த 57 ஆயிரத்து 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமன, அம்பாறை, அக்கரைப்பற்று, மஹஓய, பொத்துவில், திருக்கோவில், உஹன, நவகம்வெளி உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் இதனால் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன.கூடுதலாக நீர்த்தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களுக்கு 29 நீர் பௌஸர்கள் அனுப்பப்படுவதாகவும், 219 நீர்த்தாங்கிகளும் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அம்பாறை மாவட்ட செயலாளர் துஷித்த வணிகசிங்க தெரிவித்துள்ளார்.இந்த மாகாணங்களை அண்மித்துள்ள காடுகளில் மிருகங்களும் இதன் காரணமாக உயிரிழந்துள்ளன.

Related posts: