வடக்கில் 44 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு!

Wednesday, February 13th, 2019

வடக்கு மாகாணத்தில் சுமார் 44 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நெல் அறுவடை ஆரம்பித்த நிலையில் கடந்த 5 ஆம் திகதியிலிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் கொள்வனவு செய்வதாக அச் சபை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக நெல் கொள்வனவு செய்யப்படுவதாகவும் கடந்த 9 ஆம் திகதி வரை ஒரு இலட்சத்து  39 ஆயிரத்து 700 கிலோ கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: