வடக்கில் 21 ஆம் திகதி 680 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் – வடமாகாண ஆளுநர் அறிவிப்பு!

Tuesday, October 5th, 2021

இம்மாதம் 21 ஆம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புக்களை கொண்டமைந்துள்ள வட மாகாணத்தில் உள்ள 680 பாடசாலைகளினை மீள ஆரம்பிக்கமுடியும் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று (05.10.2021) செவ்வாய்க்கிழமை முற்பகல் மெய்நிகர் இணைய வழி மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஆளுநர் செயலகத்திலிருந்து இணைந்திருந்தார்.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவீக்கையிலேயே வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்  –  

இலங்கையின் அனைத்து மாகாண ஆளுநர்களினாலும் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இந்த முடிவு எட்டப்பபட்டதாகவும்’ அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் அனைத்து மாகாண ஆளுநர்கள்இபிரதம செயலாளர்கள் மற்றும் கல்வி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: