வடக்கில் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளைமுதல் முன்னெடுப்பு – சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு!
Monday, September 20th, 2021வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், நாளைமுதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் –
தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விவரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியினால் வெளியிடப்படும்.
அவ்வாறு அறிவிக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது, இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படும்.
20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் தமது அடையாள அட்டை போன்ற உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போக்குவரவு முறைப்பாடுகளை தெரிவிக்க 1955க்கு அழையுங்கள்!
ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் அரச பணியாளர்கள் மாத்திரம் கடமைக்கு - நிறுவன பிரதானியினால் பணியாளர...
|
|