வடக்கில் வேகமாக பரவும் இன்புளுவன்சா !

Friday, April 14th, 2017

யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையின் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 510 பேர் முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.  இதுவரை இவ்வருடம் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை 95 பேர்களின் இரத்தப் பரிசோதனையினை கொழும்புக்கு அனுப்பி இருந்தோம்.  அந்தவகையில் 36 பேருக்கு இந்த நோய் அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீ பவானந்த ராஐா தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் H1,N1 வைரஸ் காய்ச்சல் தொடர்பிலான மக்கள் தெளிப்படுத்தும் ஊடகவியாளர்கள் சந்திப்பு ஒன்று இன்று (13) யாழ் போதனா வைத்திய சாலையில் நடைபெற்றது..

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
H1, N1 என்பது இது புதியதாக இனகாணப்பட்ட வைரஸ் காய்ச்சல் ஆகும்.
இருமல், தும்பல் போன்றவற்றால் பரவக்கூடிய வைரஸ் வகை ஒரு நீர் வைரசாக உள்ளது.

சிறுவர்கள், கற்பிணித் தாய்மார்கள் ஆகியோர்களுக்கு அதிகமாக தாக்கமும் இந்த நோய் ஏற்படுத்துகின்றது. இந்த வைரஸானது நிறை குறைந்தவர்கள் மற்றும் போசாக்கான உணவுகளை உட்கொள்ளாதவர்களுக்கு இந்த தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்த நோயின் தாக்கம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது.  இதற்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Related posts:

வவுனியாவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வயல் காணிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை – ஈ...
வில்பத்து சரணாலயப் பகுதி காடழிப்பு விவகாரம் – வனப்பகுதி மீண்டும் செழிப்புற நடவடிக்கைகளை ரிஷாட் பதியூ...
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - ஆணையாளர் நாயகம் அறிவ...