வடக்கில் வாக்காளர் தோகையில் சற்று வீழ்ச்சி!

Tuesday, November 7th, 2017

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் வன்னித் தேர்தல் மாவட்டங்களின் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்புப் போக்கு கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 2015ஆம் வருடத்தைவிட அடுத்த ஆண்டில் 8 ஆயிரத்து 438 வாக்காளர்கள் அதிகரித்தனர். ஆனால், இந்த வருடம் 7 ஆயிரத்து 134 வாக்காளர்களே அதிகரித்துள்ளனர்.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 910 வாக்காளர்கள் அதிகரித்தபோதும் 2017ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 543 வாக்காளர்களே அதிகரித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 இலட்சத்து 68 ஆயிரத்து 482 பேரும்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 86 ஆயிரத்து 731பேரும்,

மன்னார் மாவட்டத்தில் 86 ஆயிரத்து 94 பேரும்,

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேரும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 72 ஆயிரத்து 961 பேரும் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர்.

ஜனவரி மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 2017ஆம்ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலே பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: