வடக்கில் வழமைபோல் சேவைகள்!

Saturday, December 3rd, 2016

நாட்டில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்தியுமளவுக்கு புகையிரத சேவைகள் நடத்தப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரி விஜயசமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதே வேளை பயணிகளின் நலன்கருதி  கூடுதலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்தார்.

பயணிகளின் நலன்கருதி  நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நான்காயிரத்து 100 பஸ்கள் குறுந்தூர மற்றும் நெடுந்தூர சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து நிலையங்களிலும் பொதுவான ரயில் மற்றும் நெடுந்தூர சேவைகள்  இடம்பெற்றதாக ரயில் கட்டுப்பாட்டு அதிகாரி விஜயசமரசிங்க குறிப்பிட்டார். வழமையான ரயில்களுக்கு மேலதிகமாக குறுந்தூர ரயில சேவைகளும் கால அட்டவணையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக திரு. சமரசிங்க குறிப்பிட்டார்.

நெடுந்தூர புகையிரத பயணங்களுக்கு மேலதிக ரயில் சேவைகளும் கால அட்டவணையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. நேற்று பகல் வேளையிலிருந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் பொதுவான நேர அட்டவணையின்படி ரயில் சேவைகள் இடம்பெற்று வருவதாக திரு விஜயசமரசிங்க மேலும் தெரிவித்தார்.

பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில்மேலதிக ரெயில் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவைகள்  இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க  நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் நேற்று சேவை புறக்கணிப்பை மேற்கொண்ட போதிலும் வடமாகாணத்தில்  தனியார் பேருந்து சேவைகள் எவ்வித தடையுமின்றி வழமைபோல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1071568451174140931ceb3

Related posts: