வடக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக காணி வழங்க நடவடிக்கை – ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவிப்பு!
Saturday, February 19th, 2022வடக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக காணி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். .
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வடக்கில் வாழும் ஏழை மக்களுக்கு, ஆறு பேர்ச் அல்லது எட்டு பேர்ச் அளவில் எதிர்காலத்தில் இவ்வாறு காணிகளை வழங்குவதற்கு திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம். அதனைக் கொண்டு அபிவிருத்தியடைய நாங்கள் உதவிகளை செய்வோம்.
முதலில் காணியை வழங்கி அவர்களை அபிவிருத்தியடைச் செய்வதுடன், அவர்களை வீட்டு உரிமையாளர்களாக மாற்றுவதற்கே நாங்கள் முயற்சி செய்கின்றோம்.
வாய்ப்புக்கள் கிடைக்குமிடத்து இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இந்த செயற்றிட்டத்தை ஆரம்பிக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|