வடக்கில் வரட்சியின் பாதிப்பு அதிகரிப்பு — இடர் முகாமைத்துவ நிலையம்தெரிவிப்பு!

Wednesday, June 20th, 2018

நாட்டின் வட பகுதியில் நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் ஒரு சில குடும்பங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 23,000 குடும்பங்கள் கடந்த இரு மாதங்களாக நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2,326 குடும்பங்களைச் சேர்ந்த 6,978 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 குடும்பங்கள் வரட்சியால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடும்மழை, வெள்ளம், மண்சரிவு மற்றும் கடும் காற்று ஆகிய அனர்த்தங்களால் 60,944 குடும்பங்களைச் சேர்ந்த 214,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: