வடக்கில் மேலும் 11 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று!

Thursday, April 22nd, 2021

வட மாகாணத்தில் நேற்றையதினம் 21 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் நேற்றையதினம் 788 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் யாழ்ப்பாணம் காவல்நிலைய உத்தியோகத்தர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர்களுடன் தொடர்புடைய அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற இருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம் மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: