வடக்கில் முருங்கை ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு – 10 இலட்சம் கன்றுகளை விநியோக்கிறது ஹேலிஸ்!
Saturday, January 28th, 2017
வடக்கு மாகாணத்தில் 10 இலட்சம் முருங்கைக் கன்றுகளுடாக முருங்கைச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக குறித்த திட்டத்தை இன்று 1 இலட்சம் விவசாயிகள் ஊடக ஹேலிஸ் என்னும் பல்தேசிய நிறுவனம் ஆரம்பிக்கிறது.
இந்தத் திட்டத்தின் ஊடாக முருங்கை இலை மற்றும் விதை ஆகியவற்றில் உற்பத்தியாகும் குளிகைகளை ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முருங்கை வளர்ப்போம் முன்னேற்றுவாம் என்ற தொனிப் பொருளில் இந்தத் திட்டத்திற்hகன தொடக்க நிகழ்வு, நாவற்குழி மாகா வித்தியாலயத்தில் இன்று காலை 11மணியளவில் நடைபெறும் என்று அந்த நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படடுள்ளது ஹேலீஸ் நிறுவனத்தின் வாழ்வாதாரத் செயற்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் 1 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு மில்லியன் முருங்கை மரச் செய்கைத்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக கிராமிய மட்ட வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் அத்துடன் உள்நாட்டு நுகர்வுக்கு மேலதிகமான முருங்கை இலைகள் மற்றும் காய்கள் ஏற்றுமதி செய்யப்படும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் மன்னார் ஆகிய 5 மாவட்டங்களிலும் கைக் கன்றுகள் என்ற அடிப்படையில் வழங்கப்படும். இதில் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் காலை 11மணியளவில் நடைபெறும். அந் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 1000 விவசாயிகளுக்கு 10,000 முருங்கைக் கன்றுகள் நடுகைக்காக வழங்கப்படும்.
Related posts:
|
|