வடக்கில் மீன் ஏற்றுமதி கைத்தொழிற்சாலை வலயம்!

Thursday, July 26th, 2018

வட மாகாணத்தில் ஏற்றுமதிக்கான மற்றுமொரு மீன் உற்பத்தி தொழில் பேட்டை ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இதற்காக கடற்தொழில் நீர்வள அபிவிருத்தி கிராமிய பொருளாதார தொடர்பான இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி இந்திய முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை ஒன்று தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் முதலீட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் இலங்கை இறால், நண்டு உள்ளிட்ட வகைக்கு நல்ல கிராக்கி உண்டு.
இந்த உற்பத்தி துறையில் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கு தாம் விருப்பம் கொண்டுள்ளதாக இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாரிப்பு தொழிற்சாலை பேட்டை ஒன்று சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ளது.
இதனூடாக புதிதாக 800 பேருக்கு தொழில்வாய்ப்புக்களும் மறைமுகமாக 2000 பேருக்கும் மேற்பட்டோருக்கான தொழில்களை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த திட்டம் அமையவுள்ளது.
இந்த முதலீட்டுக்கான திட்ட அறிக்கை ஒரு வார காலத்துக்குள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சிக்கு சமர்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Related posts:

சுரக்ஷா காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு!
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் சீர்த்திருத்தங்கள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பி...
அமைச்சர் பந்துல குணவர்தன துபாய் பயணம் - இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்துறை பேச்...