வடக்கில் போதைப்பொருள் உள்ளிட்ட இதர குற்றச் செயல்கள் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் – பதவியேற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் சூளுரை!

வட மாகாணத்தில் போதைப்பொருள் உள்ளிட்ட இதர குற்றச் செயல்கள் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என புதிதாக பதவியேற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் சூளுரைத்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக திலக் சி.ஏ.தனபால பதவியேற்றார். இந்நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் – வடக்கு மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராக பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சியே.
வடக்கில் ஏற்கனவே பணியாற்றியவன் என்ற அடிப்படையில், இங்குள்ள பிரச்சினைகள் பலவற்றை அனுபவ ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் நான் அறிவேன்.
ஆதலால், வடமாகாண மக்களுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எந்தச் சிரமமும் இருக்கப்போவதில்லை.
வடக்கு மாகாணத்தில் வீதிப் போக்குவரத்தில் உள்ள குறைபாடுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு மேம்பட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேவேளை போதைப்பொருள் பிரச்சினைகள், சமூகத்தில் புரையோடிப்போயுள்ள இதர குற்றச்செயல்கள் விரைவில் கட்டுப்படுத்தப்பட்டு பொதுமக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு முடியுமான அத்தனை நடவடிக்கைகளையும் விரைவில் மேற்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|