வடக்கில் போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க “புனர்வாழ்வு நிலையம்” அவசியம் – வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
Sunday, September 6th, 2020வடக்கில் போதைபொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு “புனர்வாழ்வு நிலையம்” அவசியம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –
வடக்கு மாகாணத்தினை பொறுத்தவரைக்கும் போதைபொருள் பாவனை அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது அதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது
வடபகுதிக்கு கொண்டுவரப்படுகின்ற கஞ்சா மற்றும் ஹேரோயின் போன்ற பொருட்களை தடை செய்யப்பட வேண்டும். அதேபோல் அரசாங்கத்தின் பல வகையான கட்டுப்பாட்டு நிலைமைகளை மேலும் கட்டுக் கோப்புக்குள் கொண்டுவரும்படி கேட்டிருக்கிறோம்.
அதேசமயம் பாவனையாளர்கள் அதாவது போதைபொருளுக்கு அடிமையானவர்களை உடனடியாக புனர்வாழ்வளித்து அவர்களை மீட்க வேண்டும். ஏனெனில் ஹெரோயின் போன்ற போதை பொருள் பாவிப்பவர்கள் அவற்றை தினசரி பாவிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஆனால் அவ்வாறு போதைபொருளுக்கு அடிமையானவர்கள் அவ்வாறானவர்களை புனர்வாழ்வளித்து சிகிச்சை வழங்குவதற்கு பொருத்தமான நிலையம் வடபகுதியில் இல்லை
ஆகவே வட பகுதியில் புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கின்றோம் இதற்கான முயற்சியிலும் நாங்கள் ஈடுபடுகின்றோம் அத்துடன் இந்த புனர்வாழ்வு நிலையம் இருந்தால் உடனடியாகவே அவர்கள் சிகிச்சைக்கும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி சாதாரண பிரஜைகளாக பின்னர் அவர்கள் வாழமுடியும் என்றார்.
Related posts:
|
|