வடக்கில் புதிய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து வடக்ககல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Thursday, October 13th, 2016

வடமாகாணத்தில் புதிய அதிபர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட நியமனங்களை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் இருந்து அதிபர் தரம் – 111 போட்டிப் பீட்சையில் 398பேர் சித்தியடைந்துள்ளனர். அவர்களில் 84 பேருக்கு நேர்முகப் பரீட்சை முலம் அதிபர் வெற்றிடமுள்ள பாடசாலைகளில் நியமனம் வழங்கியிருந்தோம். அவர்கள் கடந்த 5ஆம் திகதி தமது கடமையைப் பெற்றுக்கொண்டனர். எனினும் பாடசாலைகள் வழங்கப்படாத ஏனைய அதிபர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் நியமனம் வழங்க வேண்டுமெனவும் வழங்கப்பட்ட நியமனங்களை இரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதலமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய அண்மையில் புதிதாக வழங்கப்பட்ட 84 பேருடைய நியமனங்களையும்ர இத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சரிடமிருந்து கிடைக்கப்பெற்ற 2ஆவது கடிதத்தில் மத்திய அரசின் சுற்றுநிருபம் வரும்வரை நியமனங்கள் எதுவும் வழங்கப்பட வேண்டாம் எனவும் வழங்கப்பட்ட நியமனங்களை ரத்து செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். அதிபர் தரம் – 111 போட்டிப் பரீட்சையில் வடமாகாணத்திலிருந்து 398 பேர் சித்தியடைந்திருந்தனர். கடந்த மே மாதம் அவர்களுக்குரிய பயிற்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடமை நிறைவேற்று தொடர்பாகவும் தரம் பெற்ற அதிபர் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக புதிய அதிபர்களுக்கான நியமனங்களை இடைநிறுத்தி வைக்குமாறு கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வடமாகாண கலடவி அமைச்சினால் அண்மையில் மேற்குறித்த தரத்திலான அதிபர்களில் 84 பேருக்கு அண்மையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த நியமனம் சட்டவலுவற்றதும் எனவும் இது வடமாகாணத்தில் மட்டுமே நடைபெற்றுள்ளது. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் 84 பேருக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறித்த நியமனங்களை இரத்து செய்து ஒரே நேரத்தில் அனைத்து அதிபர்களுக்கும் நியமனம் வழங்கப்படவேண்டும் எனவும் புதிய அதிபர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன் கல்வி அமைச்சின் சுற்றுநிருபம் வராமல் நியமனம் வழங்குவது தவறு எனவும் இவ்வாறு நியமனங்கள் வழங்குவது எமது சேவைக்காலத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடுமென வடமாகாண கல்வி அமைச்சிடமும் முறைப்பாடு செய்திருந்தனர். குறித்த கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் மத்திய கல்வி அமைச்சில் இருந்து நியமன விதிமுறை ஒழுங்குகள் கிடைக்கும்வரை அதிபர் நியமனங்களை வழங்க வேண்டாம் எனவும் வழங்கப்பட்ட புதிய நியமனங்களை ரத்து செய்யும்படியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கடந்த 5ஆம் திகதி வழங்கப்பட்ட புதிய அதிபர் நியமனங்கள் அனைத்தையும் உடனடியாக இரத்து செய்ய வடமாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Cancelled

Related posts: