வடக்கில் பாடசாலைகளிலிருந்து இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வடக்கு மாகாணத்தில் பாடசாலையிலிருந்து இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புத் திணைக்களத்தின் புள்ளிவிபரத்திலிருந்து தெரியவருகிறது.
கடந்த ஆண்டுகளைவிட 2018 ஆம் ஆண்டு வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட மன்னார் மாவட்டத்தில் மாணவர் இடைவிலகல் சடுதியாக அதிகரித்துள்ளதாக குறித்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் 28 மாணவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 மாணவர்களும் மன்னார் மாவட்டத்திலிருந்து 33 மாணவர்களும் வவுனியா மாவட்டத்திலிருந்து 19 மாணவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 29 மாணவர்களும் மொத்தமாக 118 மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடைவிலகியுள்ளனர்.
அதேபோன்று கடந்த 2017 ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் 41 மாணவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 மாணவர்களும் மன்னார் மாவட்டத்திலிருந்து 09 மாணவர்களும் வவுனியா மாவட்டத்திலிருந்து 11 மாணவர்களும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 20 மாணவர்களும் மொத்தமாக 94 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர் என அந்த புள்ளி விபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|