வடக்கில் தீவிமடையும் பன்றிக்காய்ச்சல்

வட மாகாணத்தில் H1N1 எனப்படும் இன்புளுவன்ஸா நோய்க்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 400 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தே அதிகளவான நோயாளர்கள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதன்படி கிளிநொச்சி வைத்தியசாலையில் 244 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்கள் எனவும் இரத்தமாதிரி பரிசோதனையின் மூலம் 65 பேர் இந்த நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஒப்பந்தத்தை இரத்துச் செய்ததால் 1700 கோடி ரூபா நஷ்டம்!
கடமை நேரத்தில் அரச ஊழியர்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் விசேட சுற்றுநிருபம் வெளியானது!
2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 2,518 பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்க ...
|
|