வடக்கில் தரப்படுத்தப்படவுள்ள ப.நோ.கூ.சங்கங்கள்!
Wednesday, March 6th, 2019வட மாகாணத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் “ஏ “ தொடக்கம் “ஈ” வரை தரப்படுத்தப்படவுள்ளன என்று மாகாண கூட்டுறவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் சில சங்கங்கள் சிறப்பாகவும், சில சங்கங்கள் மந்த கதியிலும் செயற்பட்டு வருகின்றன.
இவற்றில் மாவட்டத்துக்கு ஒன்று என்ற வகையில் கோப் சிற்றிகளாக மாற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் ஒவ்வொரு சங்கங்களும் ஆங்கில எழுத்து ‘ஏ’ தொடக்கம் “ஈ” வரை தர வரிசை செய்யப்படவுள்ளன.
இதன் மூலம் ஒவ்வொரு சங்கங்களும் எந்த நிலையில் உள்ளன. அவற்றின் தேவை என்ன போன்ற விடயங்களை மதிப்பிட முடியும், இந்த மதிப்பீடுகளின் மூலம் சங்கங்கள் சிறப்பாகச் செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு நிறைவேறியது!
கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா ஆரம்பம்!
பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் அதிரடி உத்தரவு!
|
|