வடக்கில் கால்நடைகள் வளர்ப்பு தொடர்பில் அதிக அக்கறை தேவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

வடக்கைப் பொறுத்தவரையில் கால்நடைகள் வளர்ப்பில் பெரும்பாலன மக்கள் ஈடுபட்டு வருகின்ற நிலையில், கால்நடைகளுக்கான தீவனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றினை அங்கு நிறுவ வேண்டும். இதற்கான கடல்சார் மூலவளங்களை வடக்கிலேயே பெற்றுக்கொள்ள முடியும். விவசாயம் சார்ந்த மூலவளங்களை அதற்குரிய உற்பத்திகளை ஊக்குவிப்பதன் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் விவசாய ரீதியிலும் மேலும் அபிவிருத்தியினைக் காண முடியும். உள்ளூர் உற்பத்திகளை பெருக்கி தேசிய உற்பத்தியில் சிறந்த பங்களிப்பினை ஏற்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் விலங்குகள் தீவனம் தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதனையொட்டி கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், யாழ் குடாநாடு உட்பட வடக்கில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. ஏற்கனவே காணப்பட்ட சில மேய்ச்சல் தரைகளும் வன இலாக்காவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, உவர் நீர் உட்புகாத வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, மழை நீரைச் சேமித்து மேய்ச்சல் தரைகளை உருவாக்க முடியும். இவை தற்காலிக மற்றும் நிரந்தர ஏற்பாடுகளாக அமைய வேண்டும்.
வடக்கில் நல்லின ஆடு, மாடுகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இது தொடர்பில் அவதானமெடுத்து அவற்றைத் தருவித்து வழங்குவதற்கும், இனப் பெருக்க ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|