வடக்கில் கண்ணிவெடி அகற்றுவதற்கு ஜப்பானிய அரசு 11 கோடி நிதியுதவி!

Sunday, December 27th, 2020

வடமாகாணத்தில் மனித நேய நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் 11 கோடி ரூபா தொகையை வழங்கியுள்ளது.

இத் தொகை ‘மெக்’ என்றழைக்கப்படும் நிலக்கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கு வழங்கப்படுகிறது.

இது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவரும், மெக் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் கடந்த புதன்கிழமை கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: