வடக்கில் கடும் வெப்பம் – அச்சத்தில் மக்கள்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் இன்று வெப்பமான காலநிலையை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலுள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர்நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார்.
இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் என்றும், அதனை தொடர்ந்து வெப்ப நிலை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப காலநிலையின் போது கூடுதலாக நீரை பருகுவது முக்கியமானதாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆபத்தான தொழில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆயுள் காப்புறுதி - அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன!
சாட்சியங்களை விடுவித்தார் நீதிபதி இளஞ்செழியன்!
இலங்கை போக்குவரத்து சபை - ரயில்வே திணைக்களத்தின் வருமானத்தில் வீழ்ச்சி !
|
|