வடக்கில் கடந்த ஆறு வருடங்களில் இருபது இலட்சத்து 51 ஆயிரத்து 80 எண்பது சதுரமீற்றர் பரப்பளவிலிருந்து வெடிபொருட்களை அகற்றப்பட்டுள்ளது – ஸார்ப் நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022

கடந்த ஆறு வருடங்களில் இருபது இலட்சத்து 51080 எண்பது சதுரமீற்றர் பரப்பளவிலிருந்து 33553  அபாயகரமான வெடிபொருட்களை இதுவரை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் குறித்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிகையிலேயே ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையின் வடபகுதியில் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்டு வருகிறது.

இது கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2022 ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கின் பல பகுதிகளின் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

அந்தவகையில் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும் கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவு பகுதியிலும் தமது பணியை முன்னெடுத்திருந்தது.

இதன்போது இருபது இலட்சத்து ஐம்பத்தொராயிரத்து எண்பது சதுரமீற்றர் பரப்பளவிலிருந்து முப்பத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பத்துமூன்று அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முகமாலை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும்ஶ்ரீ அம்பகாமம் பகுதியிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: