வடக்கில் ஒரு நாளில் 459 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – 8 கொரோனா மரணங்களும் பதிவு!

Friday, September 10th, 2021

வடமாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 459 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 8 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் செப்டெம்பர் மாதத்தின்முதல் 8 நாட்களில் வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 546 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி, நேற்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 178 கொரோனா நோயாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 121 கொரோனா நோயாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 77 கொரோனா நோயாளர்களும் முல்லைத்தீவில் 57 கொரோனா நோயாளர்களும் மன்னாரில் 27 கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 பேரும் மன்னார் மாவட்டத்தில் 2 பேரும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 31 ஆயிரத்து 375 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 530 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 651 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 311 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: