வடக்கில் ஏற்பட்டுள்ள அழிவு தொடர்பில் அறிவிப்பு!

Tuesday, March 13th, 2018

வறட்சி காரணமாக வடக்கில் 103,000 ஏக்கர் வயல்கள் அழிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இதனால் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென வடக்கின் பிரதேச செயலாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரத்தில் பிரதேச செயலாளர்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்துள்ளனர். இதனடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் மிகவும் மோசமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

மன்னாரில் மட்டும் 32,000 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் 28,000 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வடக்கில் எந்தவொரு விவசாய நிலமும் காப்புறுதி செய்யப்படாத காரணத்தினால், வறட்சி நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

கடந்த பருவ காலத்தில் நெற்செய்கையில் வடக்கு விவசாயிகள் ஈடுபடாத காரணத்தினால், இந்த போகத்திற்கான உர மானியங்களும் வடக்கு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: