வடக்கில் இராணுவத்தினர் விவசாய பண்ணைகளை நடத்தவது முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கே – நாடாளுமன்றில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Wednesday, August 4th, 2021

நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் விவசாய பண்ணைகளின் பிரதான நோக்கம் என தெரிவித்துள்ள அமைச்சர் சமல் ராஜபக்ஷ கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது இதற்காகவே என்றும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் வெள்ளாங்குளம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருவதானது புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவற்கே என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சிவில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கையிலே நீர்பாசனதுறை அமைச்சரும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: