வடக்கில் இன்றுமுதல் கள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி – பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா அறிவிப்பு!

Friday, July 2nd, 2021

வடமாகாணம் பூராகவும் இன்றிலிருந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா தெரிவித்துள்ளார்.

இன்று பனை அபிவிருத்தி சபை தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமை காரணமாக சகல கள் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக கள் விநியோகமும் பாதிக்கப்பட்டிருந்தது

தற்போது மதுவரித் திணைக்களத்தினால் கள் போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முயற்சியை மேற்கொண்ட ராஜாங்க அமைச்சர் மற்றும் மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கள் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு அண்மைய நாட்களில் பொதுமக்களால் விண்ணப்பம் அனுப்பப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் உடனடியாகவே மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தோம் .ஆனால் அதற்கு சில நிபந்தனைகளுடன் வடக்கில் கள் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்

கள் விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் கள் அருந்த முடியாது. அத்தோடு அந்த பகுதியில் ஒன்று கூடி நிற்க முடியாது எனவும் சுகாதார நடைமுறையை பின்பற்றி கள் விற்க முடியும் என்ற நிபந்தனைகளுடன் கள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த அனுமதியினை சரியான முறையில் பயன்படுத்தி செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் பூஸ்டர் செலுத்துகையை பெற்றுள்ளனர்!
ஜனவரியில் இடம்பெற்ற 235 விபத்துகளில் 250 பேர் பலி - வீதி விபத்துகளை சட்டங்களால் மட்டும் குறைக்க முட...
பேராதனை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம் - மருந்துகளுக்கான தேவைகளை கண்டறியுமாறு இந...