வடக்கிலிருந்து தமிழகத்துக்கு கப்பல் சேவை!
Tuesday, December 20th, 2016
திருவாதிரையை முன்னிட்டு வடக்கில் வாழும் இந்துக்கள் தென்னிந்தியா சென்று வருவதற்கென விசேட கப்பல் சேவையொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னெடுத்து வருகின்றார்.
கப்பல் சேவைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் ஆளுநர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
திருவாதிரையை முன்னிட்டு தென்னிந்தியாவில் ஜனவரி 02 அம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இதில் கலந்து கொள்வதற்கு வடக்ைகச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் இந்து பக்தர்கள் விருப்பம் கொண்டுள்ளனர். இந்த பக்தர்களின் நலன் கருதியே விசேட கப்பல் சேவையை ஏற்பாடு செய்வதற்கு உத்தேசித்திருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
மேலும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டாலும் அது குறித்த காலப்பகுதிக்கு பக்தர்களுக்கு மட்டுமே உரித்துடையதாக அமையுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இச்சேவை நடைமுறைக்கு வருமாயின் காங்கேசந்துறையிலிருந்து தென்னிந்தியாவுக்குப் பயணிகள் கப்பல் மூலம் பயணம் செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
எனினும் ஆளுநரை மேற்கோள்காட்டி இலங்கை இந்திய கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக இணையத்தளங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது எனக்கூறிய ஆளுநர் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.இலங்கை இந்தியாவுக்கிடையே கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் கப்பல் சேவை நடைமுறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|