வடக்கிலிருந்து செல்லும் தெற்கில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி!

Thursday, May 26th, 2016
இயற்கை அனர்த்தத்தால் தென்னிலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ். மாவட்டச் செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் நாளைமறுதினம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தென்னிலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கு உதவுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில், குடா நாட்டில் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிவாரணப் பொருள் சேகரிப்பு நடவடிக்கைக்கு யாழ்.குடாநாட்டு மக்கள் பூரண மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் தேவை என்று கோரிய, குடிதண்ணீர்ப் போத்தல்கள், சவர்க்காரம், பற்பசை உள்ளிட்ட முக்கிய பொருட்களை வழங்கியுள்ளனர். எம்மால் சேகரிக்கப்பட்ட பொருட்களை எதிர்வரும் சனிக்கிழமை, மாவட்ட மேலதிக அரச அதிபர் செந்தில்நந்தனனினால் நேரடியாகக் கொண்டு சென்று கையளிக்கப்படவுள்ளன.

எனவே, இதற்குப் பங்களிப்பை வழங்கவுள்ளவர்கள், இன்றும் நாளையும் பொருட்களை மாவட்டச் செயலகத்தில் ஒப்படைக்க முடியும்” என்றார்.

Related posts: