வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் சட்டம், ஒழுங்குகள் அமைச்சர்!

Sunday, July 8th, 2018

சட்டம், ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அடுத்த வாரம் அளவில் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றதால் அதனைக் கட்டுப்படுத்த அங்கு அதிகளவான காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், யாழில் பணியாற்றும் காவல்துறையினரின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் குறித்து கண்காணிக்க சட்டம் ஒழுங்குகள் அமைச்சர் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: