வடக்கிற்கு செல்லும் வாகனங்களுக்கு ஏ-9 வீதியில் தொற்று நீக்கம்!

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிருமித்தொற்றை தடுக்கும் முகமாக ஏ-9 வீதியால் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நீக்கும் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் கிளிநொச்சி, முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிற பிரதேசங்களிலிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சுத்திகரிப்பின் பின்னர் அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த செயற்திட்டம் இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது கிளிநொச்சி நகரில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் வடக்கிற்குள் நுளையும் அனைத்து வாகனங்களிற்கும் இந்த நடைமுறையை செயற்படுத்த உள்ளதாக கூறப்படுகின்றது.
Related posts:
விலை நிர்ணயிக்கப்பட்ட 10 பொருட்களில் விலையை மேலும் 5 ரூபாவால் உயர்த்த முடியும்?
பொலித்தீன் பாவனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுற்றாடல் அதிகார சபை!
அனைத்துக் குடும்பங்களுக்கும் பொருத்தமான வீடுகளைப் பெற்றுத் தரக்கூடிய சூழல் உருவாக்கித் தரப்படும் – ஜ...
|
|