வடக்கின் வசந்தத்தை குழிதோண்டிப் புதைத்தவர் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிர் திலீபன்!

Friday, September 25th, 2020

வடக்கின் வசந்தத்தை குழிதோண்டிப் புதைத்தவர் முன்னாள் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன். அவர் முதலமைச்சராக வடக்கு மாகாணத்தை ஆட்சி செய்த போது மத்திய அரசால் அளிக்கொடுக்கட்பட்ட  பெருந்தொகை நிதியை செலவழியாது கிள்ளித் தெளித்துவிட்டு மிகுதியை திறைசேரிக்கு அனுப்பியவர்தான் இவர்.

ஆனால் இன்று தமிழ் மக்களின் அபிவிருத்தி பற்றியும் உரிமை பற்றியும் பேசிக்கொண்டிருப்பது வேடிக்கையானதொன்று என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஒத்திவைப்பு நேர  விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ் மக்களது தியாகத்திற்கு கிடைத்த மாகாணசபை அதிகாரத்தை பெற்றுக்கொண்டு கதிரையை அலங்கரித்த விக்னேஸ்வரன்  தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடக்காது இன்று இங்கு வந்து ஏதேதோ கூறுகின்றார். விக்கினேஸ்வரன் இங்கு இவ்வாறு பேசுவது தன்னை அடையாளப்படுத்தவதற்கும் ஊடக செய்திகளுக்கும்தான். அதனால் அவரது  கருத்துக்களுக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலளிப்பது நேர விரையமாகவே இருக்கும் என்று கூறு விரம்புகின்றேன்.

மேலும் முஸ்லிம் சகோதர அரசியல்வாதிகள் தற்போது சிறுபான்மை பெரும்பான்மை என்று பேசி இனவாதத்தை தூண்டிக்கொண்டிருப்பது வேதனையானதாக உள்ளது.

வவுனியா மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருந்தன. அத்துடன் முஸ்லிம் மக்களே அனைத்து உதவிகளையும் பெற்றுவந்தனர். இதை செய்தது முஸ்லிம் இன அரசியல் தலைவர்களே.

அத்துடன் அந்த காலப்பகுதியில் எமது தமிழ் மக்களி பலர் வவுனியாவில் அடிப்படை தேவையான மலசல கூடம் கூட இல்லாது பெரும் துன்ப துயரங்களை ஆனுபவித்தவருகின்றனர். ஆனால் கடந்த  காலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் அதை செய்து கொடுக்க முயற்சிக்கவில்லை.

அப்போது தமது இனம் மட்டும் தான் அவர்களுக்கு கண்ணுக்கு தெரிந்ததே தவிர எமது இனம் கண்ணுக்கு தெரியவில்லை.  ஆனால் இன்று சிறுபான்மை பெரும்பான்மை என்று பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். இது வேடிக்கையான தொன்றாகவே இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: