வடக்கின் முதல்வர், பேரவைத் தலைவருக்கு ஆளுநர் அவசர கடிதம்!

Monday, November 14th, 2016

வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைக்குழு தொடர்பில் சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினை அனுப்பி வைக்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரே கோரியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணையை மேற்கொள்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்டுள்ள ஒய்வு பெற்ற நீதியரசர் தலைமையிலான குழுவிற்கான அனுமதியினை வழங்குமாறும், இதற்கான நிதி அனுமதியும் ஆளுநரிடம் கோரப்பட்டிருக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வட மாகாண சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினையும் அங்கு மேற்கொள்ள வேண்டியுள்ள விசாரணைகளின் விபரங்களையும் அனுப்பிவைக்குமாறு ஆளுநர் ரெஜினோலட் குரே பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

424532

Related posts: