வடக்கின் முக்கிய பொறுப்புகளிலிருந்து சிலரை இடமாற்ற ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் நடவடிக்கை!

Saturday, August 26th, 2023

வட மாகாண ஆளுநரின் செயலாளரான வாகீசன் மற்றும் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) குகநாதன் ஆகியோரின் பதவிகளை மாற்றுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாணத்தில் எவ்வித ஊழல் மோசடிகளில் தொடர்புபடாத  நேர்மையான அதிகாரிகளை அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து விலக்கி கீழ் நிலைப் பதவிகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநரின் செயலாளராக இருந்த வாகீசனை மகளிர் விவகார அமைச்சுக்கும் மகளிர் விவகாரத்தில் அமைச்சின் செயலாளராக இருந்த ரூபினி வரதலிங்கத்தை பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகத்திற்கும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரதிப் பிரத செயலாளராக இருந்த குகநாதனை உள்ளூராட்சி அமைச்சுகும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த தடவை வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவி வகித்தபோது மன்னாரில் அரச காணிகள் பகிர்ந்தாளிப்பதில் தனக்கு சார்பாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக மாகாண ஆணையாளர் பதவியில் இருந்து குகநாதனை மாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: