வடக்கின் மீள் குடியேற்றத்திற்கு வடமாகாணசபை இன்றுவரை துளியளவேனும் உதவவில்லை – அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு!

Tuesday, July 26th, 2016

மீள்குடியேற்றச் செயலணியினை  வடக்கு மாகாண சபையினர் முடக்க முனைந்தால் அதனை பார்த்துக்கொண்டு இருக்க முடியாதென்றும் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் முறையாக ஒரு கட்டமைப்பின் கீழே குடியேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குயேற்றி மக்களை  நிம்மதியாக வாழ வைக்கவென உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதனை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கண்டித்துள்ளதுடன்

மீள்குடியேற்ற செயலணியின் நோக்கங்களை திரிவுபடுத்தி அதன் செயற்பாடுகளை முடக்கும் வகையில் சந்தேக  கண்ணோடு மாகாணசபை பார்த்து வருகின்றதெனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தமது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளார்!

முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா தலைமையிலான வடக்கு மாகாணசபை கடந்த 3 வருட காலம் பதவியில் இருந்து வருகின்றது. 1990ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இன்னும் தென்னிலங்கையில் பல இடங்களில் முகாம்களிலும் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்

வட மாகாண சபையைப்  முஸ்லிம்கள் குடியேறுவதற்கு இன்று வரை துளியளவேனும் உதவவில்லையென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளதுடன்மத்திய அரசு தற்போது முன்னெடுத்துள்ள மீள்குடியேற்றக் கட்டமைப்பைச் சீர்குலைப்பதற்கு வட மாகாண சபை முன்னிற்பது வேதனையானதெனவும் அது மனித தர்மமும் அல்லவென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

மலசலகூத்தினைக்கூட மக்களுக்கு கட்டிக்கொடுக்காத வடக்கு மாகாணசபை , காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்றெல்லாம் கோரிக்கை விடுப்பது ஆச்சரியமானதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: