வடக்கின் மீன்பிடித் தொழில் ஆபத்தில் – பாதுகாப்பு அமைச்சு அறிக்கை!

வடக்கில் மீன்பிடித் தொழில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடிப்பதற்காக இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளமை தொடர்பிலான மாதாந்த அறிக்கையை சமர்ப்பித்த பாதுகாப்பு அமைச்சு, வடக்கின் மீன்பிடிக் கைத்தொழில் தொடர்பில் தகவல்களை வெளியிட்டது.
அதன்படி இந்த வருடத்தில் மாத்திரம் 4,356 இந்திய மீனவப் படகுகள் இலங்கை எல்லைக்குள் பிரவேசித்துள்ளன. இதன்போது ஐவர் கைது செய்யப்பட்டுள்னர்.
2015 ஆம் ஆண்டில் இருந்து 71,609 இந்திய மீனவப் படகுகள் இலங்கை எல்லைக்குள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது 2,916 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
வானிலையில் மாற்றம்!
2019 இல் ஆசியாவை சுனாமி அழிக்கும்: துல்லியமாக சொல்லப்பட்டதால் உலக நாடுகள் அதிர்ச்சி!
மலையகப் பகுதியில் கேட்கும் மர்ம ஒலி - பாதகமான நிலைமை ஏற்படலாம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்...
|
|