வடக்கின் போர் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பம்!

Tuesday, March 5th, 2019

‘வடக்கின் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது.

வடக்கில் மிகவும் பிரபல்யமான போட்டியாக கருதப்படும் இந்த போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் 8, 9 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

இரு பாடசாலைகளுக்கும் இடையில் 113 ஆவது போட்டியாக மொபிட்டல் நிறுவனத்தின் அனுசரணையுடன் இது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: