வடக்கின் புதிய பிரதி அவைத்தலைவரானார் கமலேஸ்வரன்!

Thursday, October 27th, 2016

வடமகாணசபையின் புதிய  பிரதி அவைத்தலைவராக கே.வி.கமலேஸ்வரன், வாக்கெடுப்பு ஊடாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வட மாகாண சபையின் முதலாவது  பிரதித் அவைத்தலைவராக (பிரதித் தவிசாளர்) பதவி வகித்த அன்டனி ஜெயநாதன், கடந்த மாதம் விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மறைவையடுத்து, வடமாகாண சபையின் பிரதித் அவைத்தலைவர் பதவி ​வெற்றிடமாகியது.

அதனையடுத்து, வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று  வியாழக்கிழமை (27) ஆரம்பமாகி நடைபெற்ற போது, புதிய பிரதி அவைத்தலைவராக கே.வி.கமலேஸ்வரன், தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

article_1477556299-npc

Related posts: