வடக்கின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

Monday, October 11th, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்றுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராக இருந்த அவர் கடந்த வாரம் அந்த பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார்.

மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராகவும் ஜீவன் தியாகராஜா கடமையாற்றியுள்ளார். இன்னிலையிலேயே இன்று அவர் வடக்கின் ஆளுநராக பதவியேற்றுள்ளளார்.

முன்பதாக இதுவரை காலமும் வட மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம். சார்ள்ஸ் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


வர்த்தமானியில் உள்ளவாறு சம்பளம் வழங்கப்படும் - பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன பேச்சாளர் தெரிவிப்ப...
சீனாவின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்த நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சியும் தங்கியுள்ளது – பிரதம...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது சாத்தியம் - சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவு...