வடக்கின் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது – யாழ். கட்டளை தளபதி

Monday, March 28th, 2016

வடபகுதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவரும் அச்சமடைய தேவையில்லை என யாழ். கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கின் தேசிய பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரிப்பதாக தெரிவித்தள்ளார்.

ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் தென்னிலங்கையின் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட குழுவொன்று தற்போது வடக்கிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்பு தரப்பினருக்கும், ஊகடவியலாளர்களுக்கு இடையில் பலாலி பாதுகாப்பு தலத்தில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ். கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஆட்சிமாற்றத்தின் பின்னர் வடக்கின் நிலைமைகள் அச்சுறுத்தலாக உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் வடபகுதி ஊடகவியலாளர்கள் மீதான பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இந்த கலந்துரையாடளில் அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதி ஊடகத்துறை அமைச்சர், ஊடகவியலாளர்கள மற்றும் முப்படை பிரதானிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: