வடக்கின் உற்பத்திகளுக்கு நியாயமான விலையில் நிறைவான சந்தை வாய்ப்பு. யாழில் விவசாய அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ உறுதி!

Tuesday, September 15th, 2020

வடக்கில் விவசாய உற்பத்திகள் அதிகரிக்கும் பட்சத்தில் சர்வதேச சந்தை வாய்ப்பை உருவாக்கித் தரமுடியும் என்று தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, விவசாயிக்கள் இரசாயணப் பசளை பாவனையற்ற விவசாய நடவடிக்கைகளில் ஆர்வம் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று(15.09.2020) இடம்பெற்ற ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விவசாய அமைச்சரினால் குறித்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விவசாயத் துறை இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட குறித்த கலந்துரையாடலில் தொடர்ந்தும் உரையாற்றிய விவசாய அமைச்சர்,

‘ஒரு காலத்தில் விவசாய பூமியாகவும் தென்னிலங்கைக்கு வெங்காயம் போன்ற பல்வேறு விளைபொருட்களை வழங்கிய பிரதேசமாகவும் விளங்கிய வடக்கு மாகாணம் யுத்தம் காரணமாக விவசாய நடவடிக்கைகளில் பாரியளில் வீழ்ச்சியடைந்துள்ளது.

மீண்டும் வடக்கு வடக்கு மாகாணத்தையும் விவசாய பூமியாக மாற்றி வளங் கொழிக்கும் பிரதேசமாக மாற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். எனவே, வடக்கில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இருக்க கூடிய தடைக்கள் அனைத்தையும் நீக்கி, தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் இந்த அரசாங்கம் தயாரக இருக்கின்றது.

வடக்கின் விவசாய நிலங்களைப் பொறுத்த வரையில், அவை இன்னும் தங்களுடைய வளத்;தினை இழக்காமல் காணப்படுகின்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது. இவ்வாறான நிலத்தில் இரசாயணப் பசளைகளை பயன்படுத்தாது விவசாய நடவடிக்கைகைளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இரசாயணக் கலப்படமற்ற பொருட்களுக்கு சர்வதேச சந்தைகளில் பாரிய வரவேற்பு காணப்படுவதால், அவற்றின் மூலம் விவசாயிகள் சிறந்த நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.’ என்று தெரிவித்தார்

யாழ். மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்குடன் விவசாய அமைச்சு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும்;த கலந்துரையாடலுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், விவசாயிகளினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்து பொருத்தமான அறிவுறுத்தல்களும் தீர்வுகளும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: