வடக்கின் அஞ்சல் தின நிகழ்வு இம்முறை முல்லைத்தீவில்!

Tuesday, October 18th, 2016

வடக்கு மாகாணத்திற்கான 142ஆவது சர்வதேச அஞ்சல தின நிகழ்வுகள் இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறும். இந்த உலக அஞ்சல் தின நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் என்.இரத்தினசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் தபால் மா அதிபர் ஜ.எல்.பி.ஆர் அபயரட்ண முதன்மை விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். வடக்கின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த தபாலக பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். சிறந்த அஞ்சல் உத்தியோகத்தர்கள், அஞ்சல் அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. அதனை விட அஞ்சல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் இற்த நிகழ்வில் பரிசுகள் வழங்கப்படும். அஞ்சல் தினத்தை முன்னிட்டு வடக்கில் உள்ள அஞ்சல் அலுவலகங்களின் விசேட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

dsc04107

Related posts: