வங்கி முறைகேடுகள் தொடர்பாக 82 பேர் விண்ணப்பம்!

வவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி திணைக்களத்தின் சுற்று நிரூபத்தை பெற்றுக்கொள்வதற்காக இரண்டு கிராமத்தினைச் சேர்ந்த 82 பேர் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக விண்ணப்பித்துள்ளனர்.
வவுனியாவிலுள்ள சமுதாய அடிப்படை வங்கியின் செயற்பாடுகளில் வழங்கப்படும் கொடுப்பனவில் முறைகேடுகள் இடம்பெறுவதாகவும், சமுதாய அடிப்படை வங்கியின் சுற்றுநிருபம் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டிய செயற்றிட்டம் இடம்பெறுவதில்லை என தெரிவித்தும் குறித்த மக்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் சமுதாய அடிப்படை வங்கியினால் வழங்கப்பட்டு வரும் சமுர்த்திக் கொடுப்பனவு சீரான முறையில் வழங்கப்படுவதில்லை. இது பல கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் அதுவும் குளறுபடிகளுடனே இடம்பெற்று வருகின்றது.
நாங்கள் பல தடவைகள் உயர் அதிகாரிகளிடம் சென்ற விளக்கம் கோரினாலும் சரியான பதில் இதுவரை எமக்கு வழங்கப்படவில்லை. இதையடுத்தே தற்போது நாங்கள் தகவல் அறியும் உரிமையில் விண்ணப்பித்துள்ளோம். மேலும் எம்மால் கோரப்படும் விண்ணப்பங்களிற்கு 14 நாட்களுக்குள் தகவல் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|