வங்கி கடன்களை திருப்பி செலுத்தாத தொழில் முயற்சியாளர்களுக்க கடனை திருப்பி செலுத்த காலவகாசம் வழங்குங்கள் – வங்கி பிரதானிகளுக்கு பிரதமர் ஆலோசனை!

Tuesday, March 16th, 2021

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா தாக்கம் போன்ற காரணிகளினால் வங்கி கடன்களை திருப்பி செலுத்தாத தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யாது குறித்த கடனை திருப்பி செலுத்த நிவாரண காலவகாசம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ வங்கி பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நிதியமைச்சில் வங்கி பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தொழில் முயற்சியாளர்களின் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வுகாண நிதியமைச்சு , மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகள் ஒன்றினைந்து ஒருமித்த கொள்கையடிப்படையில் செயற்படுவது அவசியாகும் என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர்  வங்கி சேவையில் இவ்வாறான பிரச்சினை நெடுகாலமாகவே காணப்படுகிறது. ஆகவே இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானம் எடுப்பது அவசியமானதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம், கொரோனா தாக்கம் ஆகியவற்றின் தாக்கம் காரணமாக தொழில் முயற்சியாளர்கள் வங்கி கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

இவ்வாறானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யாது அவர்கள் கடளை திருப்பி செலுத்த நிவாரண காலவகாசம் வழங்குவது குறித்து வங்கி பிரதானிகள் ஒருமித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: