வங்கியில் தீப் பரவல் – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி விசுவமடுப் பகுதியில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் நேற்று அதிகாலை திடீரென தீ பரவியுள்ளது.
காலையில் பணிக்கு வருகை தந்த உத்தியோகத்தர்கள், வங்கியை திறந்த போது வங்கி புகை மண்டலமாக சிறிது நேரம் காட்சியளித்தது.
வங்கியிலிருந்து புகை வருவதனை அவதானித்த அயலில் உள்ள வர்த்தகர்கள் உடனடியாக, அது தொடர்பில் வங்கி ஊழியர்களுக்குத் தகவலை வழங்கினார். உடனடியாக தீ அணைப்பு சேவையின் உதவியும் நாடப்பட்டது.
எனினும் வங்கியில் இருந்த கணனிகள் உள்ளிட்ட பல பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த தீ முதன் முதலாக காசு எண்ணும் இயந்திரத்தில் இருந்தே பரவியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீயிற்கான காரணம் சேதம் தொடர்பில் உடனடி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Related posts:
ஜனவரியில் மட்டும் தென்மராட்சியில் 84 பேருக்கு டெங்கு!
தப்பியது எடப்பாடி அரசு : 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி ...
இலங்கையில் காணாமல் போனோர் சிலர் வெளிநாடுகளில் வாழ்கிறனர் - சீனாவுக்கான இலங்கை தூதுவர் தகவல் !
|
|